தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்கும் விவகாரம் - பதிலளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

ஏற்கனவே இருந்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த ஜனவரி மாதம் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் செல்வராஜ்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்