வாணியம்பாடி அருகே குடும்பதகராறில் ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் மோனிஷா தம்பதி. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மோனிஷா தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மோனிஷா சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் தனது உணவகத்தில் இருந்த கார்த்திக் மற்றும் அவரது சகோதாரர் சீனிவாசன் ஆகியோரை மோனிஷாவின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.