தமிழ்நாடு

உளவு பார்க்க டிடெக்டிவ்வை அனுப்பிய கணவன் - மனைவி செய்த தரமான சம்பவம்.. கோவையில் பகீர்

தந்தி டிவி

கோவையில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து கண்காணித்ததாக துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த 32 வயது இளம்பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் இருசக்கர வாகனத்தில் சாய்பாபா காலனியில் உள்ள நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றபோது, ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தின் பின்தொடர்ந்து வந்தார். அந்த பெண்ணின் நிறுவனம் முன்பு நின்று கொண்டிருந்த அந்த இளைஞரை, பெண்ணுடன் வேலை பார்ப்பவர்கள் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. துப்பறியும் நிறுவனத்துக்கு சென்று விசாரித்தபோது, அந்த பெண்ணின் கணவர் கண்காணிக்கச் சொல்லியதால் பின்தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின்பேரில், அந்த இளைஞரையும், துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்