தமிழ்நாடு

மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவன்

மனைவிக்கு மற்றொரு நபருடன் தகாத உறவு இருப்பதை பார்த்த கணவன் அவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடந்துள்ளது.

புதுவீட்டில் தங்கிய நிலையில் அதிகாலையில் இவர்களின் மகள் அழுதுள்ளார். அப்போது எழுந்த மாரிமுத்து தன் அருகில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை காணவில்லை எனப்தால் பல இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது அவர்களின் பழைய வீட்டில் விமலா, அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாரிமுத்து, தன் மனைவி மற்றும் அவருடன் இருந்த குமாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். மனைவியை கொலை செய்த மாரிமுத்து கண்ணீருடன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து விமலாவின் சடலத்தை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி