தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த காதல் கணவன் : துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை

தாம்பரம் அடுத்த ஒரகடம் அருகே கணவன் உயிரிழந்த துக்கத்தில், காதல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது 22 வயது மகன் பாலாஜி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற அவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். ஓராண்டுக்கு முன் ரசிதா என்ற 20வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில் கணவனின் இறப்பை தாங்கமுடியாமல் அவரது மனைவி அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் துக்கம் தாங்க முடியாத பாலாஜியின் மனைவி ரசிதா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்