தமிழ்நாடு

மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

தந்தி டிவி

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது பற்றி நவீஷா பானு அண்ணாசாலை மகளிர் காவல் நிலையத்தில் 23-ம் தேதி புகார் கொடுத்ததுடன், லத்துராம் தெருவில் உள்ள தந்தையுடன் சென்று வசித்து வருகிறார். நேற்று முஸ்தாக் பாட்ஷா மனைவியை பார்க்க சென்ற , மனைவி நவிஷா பானு கதவையே திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து பாட்ஷா, அங்கேயே உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். 94 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்ஷா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி