தமிழ்நாடு

கண்ணாமூச்சு ஆடிய போது, தாக்கப்பட்ட கணவன் உயிரிழப்பு... காதலன் மூலம் மனைவியே எமனாக மாறிய கொடூரம்

வழிப்பறி போல் நாடகம் நடத்தி கணவனை தாக்கிய சம்பவத்தில் படுகாயம் அடைந்த அனிதாவின் கணவர் கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தி டிவி

சில தினங்களுக்கு முன்பு, திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆன நிலையில் பல்லாவரத்தை சேர்ந்த கதிரவன், தனது மனைவி அனிதாவுடன் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர்.

இருவரும் கண்ணாமூச்சி விளையாடியபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், கதிரவனை கம்பியால் தாக்கிவிட்டு, அனிதா அணிந்திருந்த 12 சவரன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில், அனிதாவே காதலன் ஆண்டனி ஜெகன் துணையோடு கதிரவனை தாக்கி கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி