LIVE aathur suicide 
தமிழ்நாடு

பிடித்த பாடலை டிவியில் வைக்காத கணவர் - மனைவி தூக்கிட்டு தற்கொலை

பிடித்த பாடலை டிவியில் வைக்காத கணவர் - மனைவி தூக்கிட்டு தற்கொலை

thanthitv

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரம் கிராமத்தில் காதல் மனைவி தனக்கு பிடித்த பாடலை டிவியில் கணவன் வைக்காத கோபத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது...

பழனியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார், புவனேஸ்வரி தம்பதி திருமணமாகி 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகின்றனர்.. கணவன் தனக்கு பிடித்த பாடலை டிவியில் வீட்டில் கேட்டுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் மனைவி. புவனேஸ்வரி தனக்கு பிடித்த பாடலை டிவியில் வைக்க கணவரிடம் வலியுறுத்தியதாகவும் கணவன் வைக்காததால் கோபத்தில் புவனேஸ்வரி வீட்டில் தனி அறைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது....

இந்நிலையில் புவனேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கணவன் உள்ளே சென்று பார்க்கும் பொழுது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியை அடைந்தார்.

கணவன் கூச்சலிடமே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே பெண் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பெண் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,..‘

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC