தமிழ்நாடு

கோடிக்கணக்கில் உடல் உறுப்பு விற்பனை.. 200க்கும் மேற்பட்ட உயிர்கள்...அதிர வைக்கும் டார்க் கும்பல்

தந்தி டிவி

கேரளாவில் இருந்து சிறுநீரகம், கல்லீரல் உள்பட உடல் உறுப்புகளுக்காக ஈரான் நாட்டுக்கு ஆட்கள் கடத்தப்படுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கேரள போலீசுக்கு என்ஐஏ தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் கொச்சி விமான நிலையத்தில் சபித் நாசரை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோரின் உடல் உறுப்புகளை கோடிக்கணக்கில் விற்றது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எத்தலா பகுதியைச் சேர்ந்த சஜித் ஷியாம் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் உறுப்புக் கடத்தல் நிதிப் பரிவர்த்தனைகளை சஜித் கையாண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறுப்புகளைப் பெற்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்