தமிழ்நாடு

சுவாமி சிலை செய்ய கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட பாறை...

பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில் 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில் 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுவாமி சிலை, 7 தலை கொண்ட ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து சிலையை மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க உள்ளனர். இதற்காக 2 கல் பாறையை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை பாறை குன்றில் இருந்து எடுத்துச் சென்றனர். சுமார் 230 டன் எடை கொண்ட கல்பா​றையை லாரியில் எடுத்துச் சென்றபோது, மணலில் லாரியின் டயர் புகுந்ததால், அதை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. பெங்களூருவுக்கு பாறையை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு