தமிழ்நாடு

+2 மாணவியின் பகீர் வாக்குமூலம் - ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

திருச்சியில், தனியார் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே வேங்கூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில், குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தங்கி, 12ம் வகுப்பு வணிகவியல் பயின்று வருகிறார். இந்நிலையில், பள்ளியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் வினோத், மாணவியை சக மாணவிகள் முன்பு ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, தனது அறையில் வைத்திருந்த 7 பாராசிட்டமல் உட்பட மேலும் சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர் வினோத்குமார் மீது, இரு பிரிவுகளின் கீழ் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்