தமிழ்நாடு

Minister Ramesh | அறநிலைய துறை கொண்டுவந்த மாற்றத்தால் சிக்கல் - அமல்படுத்த முடியாமல் சிரமம்

அறநிலைய துறை கொண்டுவந்த மாற்றத்தால் சிக்கல் - அமல்படுத்த முடியாமல் சிரமம்

thanthitv

அறநிலைய துறை கொண்டுவந்த புதிய மாற்றத்தால் சிக்கல் - அமல்படுத்த முடியாமல் தொடரும் சிரமம்

கோவில்களில் செல்போன் தடை - அமல்படுத்துவதில் தொடரும் சிரமம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன்களை 'ஸ்விட்ச் ஆப்' செய்து எடுத்துச் செல்ல அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவில் கருவறை மற்றும் சிற்பங்களை படம் பிடிப்பதைத் தடுக்க, முதற்கட்டமாக 52 முக்கிய கோவில்களில் 5 ரூபாய் கட்டணத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போன்களை வைக்கும் முறை கொண்டு வரப்பட்டது.

ஆனால், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், 7,000 முதல் 10,000 செல்போன்களைப் பாதுகாப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருத்தணி, சிறுவாபுரி, குமரி சுசீந்திரம், கன்னியாகுமரி பகவதி அம்மன், சேலம் சுகவனேஸ்வரர், நாமக்கல் ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல கோவில்களில் செல்போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் விடுமுறை நாட்களில் ஸ்விட்ச் ஆப் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

#minister #ramesh #phoneban #tntemples #thanthitv

Nellai ``இது என்னங்க இது கொடுமை’’ - இரவோடு இரவாக நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி

Census | CM Vijay | சென்சஸ்ஸில் சாதி விவரம்.. காத்திருக்கும் பிரேக்கிங்

Train | Ticket Booking | தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங்கில் சிக்கல்.. 3-வது நாளாக பயணிகள் ஏமாற்றம்

Omni Bus | ஆம்னி பேருந்துகள் மீது வந்த புகார்.. போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

TN Byelection 2026| அமலான ஸ்ட்ரிக்ட் விதிகள்.. பறிமுதல் செய்யப்படலாம்.. பணம் பத்திரம்.. மக்களே உஷார்