தமிழ்நாடு

இளைஞரிடம் ரூ.7 லட்சம் ஹவாலா பணம் எப்படி வந்தது? விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணி வாகன தணிக்கையில், பொறியியல் பட்டதாரியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, உரிய ஆவணம் இன்றி ஹவாலா பணத்தைக் கொண்டு செல்வது தெரியவந்தது. சென்னை MGR நகர் நெசப்பாக்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சேக் நூருதீன் என்ற அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றிய 7 லட்சம் ஹவாலா பணத்தை, போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக, இவரிடம் மண்ணடி ஈவினிங் பஜாரில் உள்ள ஒரு கடையில், 10 ரூபாய் நோட்டை காண்பித்தால், பணம் தருவார்கள் என துபாயில் இருந்து இப்ராஹிம் என்பவர் தெரிவித்துள்ளார். அதன்படி, பணத்தை வாங்கிக் கொண்டு இப்ராஹிம் கூறிய சில வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துவதற்காக, திருவல்லிக்கேணி நோக்கி பைக்கில் வந்தபோது இவர் போலீசாரிடம் சிக்கினார்.

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37.81 லட்சம் பறிமுதல்

BREAKING || முதல்வர் நாளை கொண்டுவரும் தனி தீர்மானம் - டெல்லியை திரும்ப வைக்கும் அதிரடி மூவ்

Chennai | HeavyRain | தாம்பரம் சுரங்க பாலத்தில் மழைநீர் கசிவு - அருவிபோல் கொட்டிய மழை நீர்

BREAKING || "48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு

TVK | C. Mahendran | TN Politics | தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி..தமிழக அரசியலில் திடீர் திருப்பம்