தமிழ்நாடு

Robbery| தாய்மாமன் வீட்டிலேயே இப்படியா பண்றது.. அசிங்கத்தில் முகத்தை மூடி கொண்ட அக்கா மகள்

தாய்மாமன் வீட்டிலேயே இப்படியா பண்றது.. அசிங்கத்தில் முகத்தை மூடி கொண்ட அக்கா மகள்

thanthitv

#robbery #thaimaman சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொந்த தாய்மாமன் வீட்டில் ஆட்களை வைத்து 23 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பழனிவேலின் மனைவி செல்லம்மாள், கடந்த 12-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் வெளியே சென்றிருந்தபோது, பீரோவிலிருந்த 23 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சங்ககிரி போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பழனிவேலின் அக்கா மகள் சங்கீதா என்பவர் இருவருடன் சந்தேகத்திற்கிடமாகப் பேசிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், தாய்மாமன் மனைவி செல்லம்மாளை வங்கிக்கு அழைத்துச் சென்ற சங்கீதா, அவரது இருசக்கர வாகனத்திலிருந்த வீட்டுச் சாவியை எடுத்து, கிருபாகரன் மற்றும் நவீன்குமார் ஆகியோரிடம் கொடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது அம்பலமானது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு அவர்களை சிறையில் அடைத்தனர்.

Gold Price Today| ரூ.2000-க்கு மேல்.. தங்கம் இன்றும் அடியோடு சரிவு

Sabarimalai Death ஐயப்ப பக்தர்களை உலுக்கும் சோகம் - சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு

``இதுக்கு மேல போராட தெம்பில்ல’’ - வேறு வழியின்றி விரக்தியில் உடலை பெற சம்மதித்த குடும்பம்

Gold ரூ.8320.. இதுவரை காணா முதல் பிரமாண்ட சரிவு - லோன் வாங்கி வாங்கியவர்களுக்கு ஷாக்..

Akvan Cyclone | உக்கிரமாக மாறிய `அக்வான்’ புயல் - உடனே வந்த அலர்ட்