தமிழ்நாடு

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் அனைக்கல் பகுதியை சேர்நத் ஜெகதீஷ் என்ற லாரி ஓட்டுநர் தமது, கிளினருடன், அத்திப்பள்ளி சுங்கச்சாவடியை கடந்துள்ளார். அப்போது பாஸ்டேக், மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள், ரொக்க பணமாக செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், வாகன ஓட்டுனர் ஜெகதீஷ் மற்றும் கிளீனர் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்