தமிழ்நாடு

அப்பா, மகள்... உயிரை துடிக்க துடிக்க எடுத்த `காந்தாரா'..! ரத்த வெள்ளத்தில்.... அலறிய ஓசூர்

தந்தி டிவி

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாரு குமார் சாவ். இவர் தளி அடுத்துள்ள அகலக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மலர் ஏற்றுமதி பண்ணையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தபேஸ்வரி தேவி, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சாருகுமார் சாவ் தனது இளைய மகள் பாயல் குமாரியுடன், பெங்களூருவில் படிக்கும் தன் மகளை காண்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாருப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, காட்டுப்பன்றி ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீதும், சாருகுமார் சாவ் அணிந்திருந்த ஹெல்மேட் மீதும் முட்டியுள்ளது.இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதே போல மகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சாருகுமார் சாவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் பாயல் குமாரி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்