தமிழ்நாடு

இந்து முன்னணி நிர்வாகி கைது எதிரொலி - இந்து முன்னணியினர் சாலை மறியல்

ஒசூரில் இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் மத மாற்றம் நடைபெறுவதாக கூறி, அங்கு வழிபாடு நடத்தியவரை இந்து முன்னணியினர் பிடித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஒசூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஜெப வழிபாடு நடத்தியவரை அழைத்து சென்றனர். இதையடுத்து, இந்து முன்னனி நிர்வாகி உமேஷ் உள்ளிட்டோர், அந்த நபர் மீது புகார் கொடுப்பதற்காக காவல்நிலையம் சென்றபோது உதவி ஆய்வாளருக்கும் உமேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது உமேஷை உதவி ஆய்வாளர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், உமேஷை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் நிலையம் முன்பாக இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஒசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, உமேஸை விடுதலை செய்யுமாறு கூறி இந்து முன்னணி தொண்டர் ஒருவர், மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்