தமிழ்நாடு

கன்னட கொடியை தமிழக போலீசார் அகற்ற சொன்னதாக புகார் - கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்

ஒசூர் அருகே தமிழக வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்களை கொடுத்ததோடு தடியும் காட்டி கன்னட அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கன்னட கொடிகளுடன் சென்ற கர்நாடக மாநில வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், கொடியை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு தெரிவித்த அவர்கள் போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் கன்னட அமைப்பினர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டத்தை நடத்தினர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்தவர்களுக்கு ரோஜாப்பூக்களை கொடுத்த அவர்கள், கையில் இருந்த தடியையும் காட்டினர். இந்த போராட்டத்தால் மாநில எல்லைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்