கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எழுந்த புகை மற்றும் இரைச்சல் காரணமாக அருகிலிருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத தேனீக்கள் கலைந்தன. மொத்தமாக 5க்கும் மேற்பட்ட தேன் கூடுகளிலிருந்து கலைந்த ராட்சத தேனீக்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தேன்கனிகோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.