ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.இந்த வெற்றியை பாராட்டும் வகையில் பரிசு வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் முத்துகாளை மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கண அகராதி புத்தகங்களை இலவசமாக வழங்கினார். மாநில பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெறும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் முத்துக்காளை பாராட்டினார்.