ஆந்திர மாநிலம் நெல்லுர், பகுதியை சேர்ந்தவர் கஞ்சா வியாபாரி டேவிட். இவர், கர்நாடகா மாநிலம் மாயசந்திரா கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கு கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் பல கோடி ரூபாய் கஞ்சா மூட்டையுடன் டேவிட் காரில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கர்நாடக எல்லையான மர்சூர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது காரில் இருந்த டேவிட் மற்றும் அவரது நண்பர் சைமன் இருவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், காலில் ஏற்பட்ட காயத்தால் டேவிட் போலீசாரிடம் சிக்கிய நிலையில் சைமன் தப்பியோடி விட்டார். இதனைத்தொடர்ந்து டேவிட் வந்த கார், மற்றும் அவரிடம் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரம் கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.