தமிழ்நாடு

மக்களோடு சுற்றி திரியும் காட்டு யானை - பலரின் உயிரை பறித்த சோகம்

காட்டை அழிப்பதினால் ஏற்படும் பின்விளைவே , விலங்குகள் நாட்டிற்குள் இடப் பெயர்ச்சி அடைவதற்கான காரணம் என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.

தந்தி டிவி

* ஒசூர் அருகே அமைந்துள்ள ஆழியாளம், போடூர் மற்றும் ராமாபுரம் ஆகிய மூன்று மலைகிராமங்களில் சுமார் 120 குடும்பத்தினர் வாழ்கின்றனர்.

* விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பதையும் முக்கிய தொழிலாக கொண்டு வாழும் இந்த கிராம மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன , காட்டுயானைகள்.

* விவசாய தோட்டங்களுக்கு அருகேயே தென்பெண்ணை ஆறும் ஓடுவதால், தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் இந்த இடத்தில் தஞ்சம் அடைந்து விடுகின்றன, காட்டுயானைகள்.

* கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி காலங்களில் வெளியேறும் காட்டுயானைகளின் கூட்டம் பல வனப்பகுதிகளை கடந்து போடூர் வனப்பகுதியில் தஞ்சமடைகின்றன.

* காட்டுயானைகளின் தாக்குதலால் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு வீடுகள் ஆகியவை சேதமடைந்து வரும் நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.

* கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஐந்து ஆண்டுகளில் 35 பேர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

* எண்ணிக்கையில் குறைந்து வரும் இந்த யானைகளை பாதுகாப்பது ஒரு புறம் இருக்க, காட்டு யானைகளுடனான மனித மோதல்களை தவிர்ப்பது தலையாய கடமையாக விளங்குகிறது.

* காட்டை அழிப்பதினால் ஏற்படும் பின்விளைவே , விலங்குகள் நாட்டிற்குள் இடப் பெயர்ச்சி அடைவதற்கான காரணம் என்கிறார்கள் வன ஆர்வலர்கள். காட்டை அழிக்கும் போக்கை கை விட்டு இயற்கையை பேணிகாப்பதே இதற்கு ஒரே வழி.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்