ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் தைலமரத்தோட்டத்தில் 12க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. அவை அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, பலா மரங்களை சாய்த்தும் பயிர்களையும் சேதப்படுத்தியும் வருகின்றன. அந்த யானைகள் தற்போது ஜொனபண்டா ஏரி கரையிலுள்ள தைலமரத் தோட்டத்தில் நடமாடி வருகின்றன. அவற்றை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த யானைகளை சானமாவு காட்டு பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். யானைகளை காண கிராம மக்கள் குவிந்தனர்.