தமிழ்நாடு

ஒசூர் : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தென்பெண்ணையாற்றின் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலத்தில் தெண்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தெண்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாக உள்ள நிலையில், அணையின் தற்போதைய நீர் மட்டம் 41.66 அடியாக உள்ளது. மேலும், வினாடிக்கு 968 கனஅடி நீர் அணைக்கு வருவதால், பாதுகாப்பு கருதி அதே அளவான 968 கனஅடி நீர் தெண்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Emmanuel Macron | பிரான்ஸ் அதிபரை கொல்ல முயற்சி? - சிரியாவில் வைத்தே கதை முடிக்க சதி?

Chennai | Farmers Protest | குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் | சென்னையில் திடீர் பரபரப்பு

Wayanad Landslide | Death Toll | கடவுள் தேசத்தில் மீண்டும் நேர்ந்த கோரம் | வெளியான ஷாக் தகவல்

Anywhere Registration | ``இடைத்தரகர்களை அனுமதிக்க மாட்டோம்.. ஆகஸ்ட் 17 முதல் அனைத்தும் ஆன்லைன்’’

Breaking | CJP | Delhi | கரப்பான்பூச்சி கட்சிக்கு கிடைத்த வெற்றி | டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு