தமிழ்நாடு

Hosur Busstand | TN-ன் அதிமுக்கிய ஹாட்ஸ்பாட்.. இது பஸ் ஸ்டாண்ட் தானா? -முகம் சுளிக்க வைக்கும் காட்சி

TN-ன் அதிமுக்கிய ஹாட்ஸ்பாட்.. இது பஸ் ஸ்டாண்ட் தானா? -முகம் சுளிக்க வைக்கும் காட்சி

thanthitv

TN-ன் அதிமுக்கிய ஹாட்ஸ்பாட்.. இது பஸ் ஸ்டாண்ட் தானா? - திரும்பும் பக்கமெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் காட்சி #hosurbusstand #busstand மீண்டும் அதிகரிக்கும் சாலையோர கடைகள், மோசமான நிலையில் உள்ள ஓசூர் பேருந்து நிலையம் சுகாதாரத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் உருவாகி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் குப்பைகள் தேங்கியும் சுகாதார சீர்கேடும் நிலவுவதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே, பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகள் நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் திறந்த நிலையிலும் மற்றும் உடைந்த சாக்கடை குழாய்களால் கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் தரைத்தளமும் சேதமடைந்துள்ளதால், சுகாதார சீர்கேடு மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் பயணிகளிடையே அதிகரித்துள்ளது. இதையடுத்து, பேருந்து நிலையத்தின் முன்பகுதி மற்றும் பாலத்தின் கீழ் பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம், கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலையோர கடைகளையே நம்பி வாழும் சிறு வியாபாரிகள், மக்கள் நடமாட்டம் உள்ள சரியான மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்ற வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இருதரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

🔴LIVE :TVK | MLA | DMK | Senthil Balaji | செ.பாலாஜிக்கும் தம்பிக்கும் போலீஸ் சம்மன்

Rajendra Arlekar | Nainar Nagendran | ஆளுநருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

Nellai Murder| சிக்கிய டவர் நெட்வொர்க்.. தூக்கப்பட்ட 5 பேர் யார்? - பதற வைக்கும் நெல்லை இரட்டை கொலை

#BREAKING || Ammonia Leak | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு - சொன்னபடி பாதுகாப்பாக தொடங்கிய பணி

#BREAKING || CM Vijay | மதியம் 3 மணிக்கு.. CM விஜய் எடுத்த திடீர் முடிவு