தமிழ்நாடு

ஒசூரில் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரத்துக்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி அமமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி

அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி, ஒசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மனைவிக்கு ஆதரவாக பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி அமமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ, தேர்தல் நடத்தை விதிகளிலோ ஒருவரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க எந்த விதிகளும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு