தமிழ்நாடு

வயிற்று வலி என சென்ற நோயாளி.. "அந்த உறுப்பை அகற்றிய பிரபல பிரைவேட் ஹாஸ்பிடல்"

தந்தி டிவி

திருவள்ளூர் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகராஜ், வயிற்று வலி காரணமாக தண்டலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நாகராஜ் இரைப்பையில் கட்டி இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆம் தேதி நாகராஜ் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது, மருத்துவர்களின் கவன குறைவாலும், அலட்சியத்தாலும் மண்ணீரலை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் நாகராஜிக்கு ரத்த போக்கு நிற்காமல் வெளியேறி உடல்நிலை மோசமாகியுள்ளது. அப்போது மருத்துவர்கள் நாகராஜிக்கு மீண்டும் சர்ஜரி செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இதுகுறித்து நாகராஜுடைய மனைவி மற்றும் மகனிடம் எந்த தகவலையும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாகராஜின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்ட, உறவினர்கள் மருத்துவரிடம் கேட்ட போது அவர்கள் அலட்சியமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. நாகராஜனின் உறவினர்கள் நீதி கேட்டு மருத்துவமனையின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு