தமிழ்நாடு

ஊட்டியில் குதிரை பந்தயம் : கோப்பையை தட்டிச் சென்ற ஸெண்டோஸா குதிரை

ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்க, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து சர்வதேச புகழ் பெற்ற பல குதிரைகள் ஊட்டி வந்துள்ளன. முக்கிய பந்தயமான கவர்னர் தங்க கோப்பைக்கான போட்டி நேற்று நடைபெற்றது. 12 குதிரைகள் பங்கேற்ற இப்போட்டியில் சதீஷ்குமார், பாலகுமார், விட்டல் ஆகியோருக்கு சொந்தமான ஸெண்டோஸா என்ற குதிரை தங்க கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோப்பையை வழங்கினார். இந்த குதிரைப் பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்