Sivaganga | கடை வாசலில் அரங்கேறிய கொடூரம் - ரத்த வெள்ளத்தில் மிதந்த மூதாட்டி
#Sivaganga #murdernews #thanthitv
சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் 75 வயது மூதாட்டி, தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி பொம்மிக்கு 6 மகன்கள் உள்ள நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார்.
இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள கடைகளின் வாசல்களில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், பாகனேரி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பொம்மியின் தலையில் மர்ம நபர்கள் கல்லைப் போட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காலையில் கடையைத் திறக்க வந்த உரிமையாளர், மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.