தமிழ்நாடு

Velankanni | வேளாங்கண்ணி லாட்ஜில் அரங்கேறிய பயங்கரம்...கடைசியில் உயிரே போச்சு

வேளாங்கண்ணி லாட்ஜில் அரங்கேறிய பயங்கரம்...கடைசியில் உயிரே போச்சு

thanthitv

#velankanni | #crimenews

வேளாங்கண்ணி லாட்ஜில் அரங்கேறிய பயங்கரம்...கடைசியில் உயிரே போச்சு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், தங்கும் விடுதியில் பணியாளரைத் தாக்கி அறைக்குள் பூட்டி வைத்துச் சென்ற சம்பவத்தில், படுகாயமடைந்த பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில், கடந்த மாதம் 18-ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த சஞ்சீவி மற்றும் அவரது நண்பர்கள் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, ஏசி மற்றும் டிவி இயங்கவில்லை எனக் கூறி, விடுதி பணியாளர் மகேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மகேந்திரனை அறைக்குள் அடைத்துப் பூட்டிவிட்டு, சஞ்சீவி மற்றும் அவரது நண்பர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மகேந்திரன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதற்கிடையே, பணியாளரைத் தாக்கிவிட்டு அறையைப் பூட்டித் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மகேந்திரனின் மனைவி அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CSK | MS Dhoni | IPL-ல் தோனி விளையாடுவாரா? - ஒரே போடாக போட்ட CSK CEO காசி விஸ்வநாதன்

NGT | கழிவுகளை கால்வாய்களில் கொட்டுவதை தடுக்க உத்தரவு..

BREAKING || சென்னையில் பெரும் சோகம்... பேச்சு மூச்சு இல்லாமல் பிரிந்த இருவர் உயிர்

High Court | HRCE | Sathya Gnana Sabai | வள்ளலார் சபை நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

BREAKING || நாடே பரபரக்கும் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் சென்ற ராகுல்