#maduraiprisonissue #prisonissue
மதுரை மத்திய சிறையில் குடிநீரைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில், தலைமைக்காவலர் தெய்வநாயகத்தை கைதி மூர்த்தி முகத்தில் குத்தித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கண்களில் காயமடைந்த காவலர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள சிறையில், சம்பவத்தின்போது 4 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை சிறையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சிறைக்காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்