தமிழ்நாடு

ஓரினச் சேர்க்கை உறவு குற்றமில்லை - 377 வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை நீக்க வேண்டும் என ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.,

தந்தி டிவி

* இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை நீக்க வேண்டும் என ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.,

* இந்தநிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டில், 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

* இந்த தீர்ப்பிற்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு, ஓரினசேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான உடலுறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.

* இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

* இதையடுத்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்த பின்னர் தான் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொருவரின் தனித்துவத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

* ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது, மரணத்திற்கு நிகராகும் என குறிப்பிட்ட நீதிபதிகள், ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும், 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை