தமிழ்நாடு

இந்தியில் MBBS மருத்துவ படிப்பை தொடங்கிவைக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா

தந்தி டிவி

இந்தியில் MBBS மருத்துவ படிப்பை தொடங்கிவைக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்தியாவில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் மருத்துவக் கல்வியை தொடங்கி வைக்கிறார் என அம்மாநில முதல் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அமித்ஷா வெளியிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு இந்தியில் கற்பிப்பது இதுவே முதல் முறை என பெருமிதமாக கூறியிருக்கும் சிவராஜ்சிங் சவுகான், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்கவோ, கற்பிக்கவோ முடியாது என்ற எண்ணத்தை இது மாற்றும் எனவும், இந்தியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு படி எனவும் கூறியிருக்கிறார்.

ஒருவருடைய தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம் எனவும் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்