தமிழ்நாடு

Hockey | "பெல்ஜியம் நாட்டுக்கு விளையாட போறான்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.." - பெருமையாகபேசிய தந்தை

"பெல்ஜியம் நாட்டுக்கு விளையாட போறான்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.." - பெருமையாகபேசிய தந்தை

thanthitv

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர், இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ளார். திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயராஜ் - சீனியம்மாள். விஜயராஜ் விவசாயம் செய்து வருகிறார். சீனியம்மாள் தீப்பட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகிறார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர்களது மகனாக மணிமாறன், சிறு வயது முதலே ஹாக்கி விளையாட்டில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். படிப்படியாக முன்னேறி தற்போது இந்திய ஹாக்கி அணியின் ஜுனியர் பிரிவுக்கு தேர்வாகியுள்ளார். விரைவில் பெல்ஜியம் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடவும் உள்ளார். மணிமாறனின் உடன்பிறந்த அண்ணனான அரவிந்த் தற்போது தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு விளையாடி வருவதும், அவரை பின்பற்றி விளையாண்டு வந்த தம்பி மணிமாறன், தற்போது இந்திய அணிக்கே தேர்வாகி விட்டதும் பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்