தமிழ்நாடு

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் : நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை தனக்கு ஏற்றியதாக குற்றம் சாட்டிய மாங்காட்டை சேர்ந்த பெண், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு ஒன்றை இன்று கொடுத்துள்ளார். அதில் தனக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை உடலில் ஏற்றிய கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்