தமிழ்நாடு

தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆண்டுக்கு 5,000 பேர் என்ற அளவில், புதிதாக இந்நோய்க்கு ஆளாகி வருவதும் தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸை கட்டுப்படுத்த, பல்வேறு அமைப்புகளும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 1 ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் சிகிச்சை வட்டத்திற்குள் வராமல், 8 ஆயிரம் பேர் வெளியிடங்களில் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அவர்களையும் அரசின் சிகிச்சை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் வீதம், தகாத உறவு மற்றும் வேறு பல வகைகளினால், எச்.ஐ.வி., கிருமியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத் தக்கது ..2016ல், 6 ஆயிரம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயாளிகளாக இருந்த நிலையில், அது 2017 ல் 5 ஆயிரமாக ஆக குறைந்திருக்கிறது. போதிய சிகிச்சை வசதி இல்லாத கால கட்டத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகளில் உயிரிழந்தனர் என்றும், ஆனால் தற்போது அரசு வழங்கும் முறையான சிகிச்சையை ஒருவர் எடுத்துக்கொண்டால் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு