ஆன்மிக கண்காட்சி - பக்தர்களை கவரும் அஞ்சல் துறை அரங்கு
சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அஞ்சல் துறையின் அரங்கு பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு, தபால் தலை சேகரிப்பவர்கள் மட்டுமின்றி, பக்தர்களை கவரும் வகையில், ராமாயணம், மகாபாரதத்தை விளக்கும் வகையிலான தபால் தலைகள், அத்திவரதர் அஞ்சல் உறை என ஆன்மிக தபால்தலைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், சாதாரண மனிதர்களின் புகைப்படமும் தபால் தலைகளாக பெறும் வகையில் மை ஸ்டாம்ப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 300 ரூபாய்க்கு 12 தபால்தலைகள் வழங்கப்படுகிறது.