தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் விவகாரம் - மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை, மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழக அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்த கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்