இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர். சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகிய மூன்று பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.