கடவுள் முருகனை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகர் யோகி பாபு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணியினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், காக்டெய்ல்" திரைப்படத்தில் தமிழ் கடவுளான முருகனை இழிவுப்படுத்தும் நோக்கில் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர். போஸ்டரில் மயிலுக்கு பதிலாக கிளியை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளதாக கூறி, அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.