தமிழ்நாடு

இந்து அமைப்பினரை கொல்ல திட்டம் தீட்டியதாக வழக்கு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை, 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த மனு நீதிபதி செந்தூர்பாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 நாள் போலீஸ் காவல் முடிந்த பிறகு ஏழு பேரையும், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் இருந்த 7 பேரையும், தேசிய புலனாய்வு முகமை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்வதற்காக அழைத்து சென்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு