தமிழ்நாடு

"முறைகேட்டில் ஈடுபட்டால் டிஸ்மிஸ்" - உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் சர்மா அதிரடி

முறைகேட்டில் ஈடுபட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
முறைகேட்டில் ஈடுபட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அனைத்து அதிகாரிகளும் விரைவில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் முறைகேடு புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது இனிமேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், விடைத்தாள் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்