தமிழ்நாடு

பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி

பெண்கள் விடுதிகளுக்கு அனுமதி கொடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

* பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் போது அரசின் விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவது இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* அதில், முறையான கட்டமைப்பு இல்லாத வீடுகள் விடுதிகளாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

* சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் முறையான அனுமதி பெறாத விடுதி ஒன்றில், அதன் உரிமையாளரே ரகசிய கேமரா வைத்த அதிர்ச்சி சம்பவமும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும்

* முறைகேடாக சான்றிதழ்கள் பெறுவோர், வழங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

* இதனை விசாரித்த நீதிபதிகள், சமூக நலத்துறையின் செயலர், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

* மாவட்ட வாரியாக, பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கு அனுமதி கேட்டு எத்தனை விண்ணப்பங்கள், வழங்கப்பட்டுள்ளன என்றும்

* அந்த விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி