தமிழ்நாடு

காலக்கெடு முடியும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை - நீதிபதிகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட மூவர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி, அனுப்பட்ட நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தங்கள் வீட்டை இடித்துவிட்டதாக அன்பரசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுபடி, செங்கல்பட்டு வட்டாட்சியரும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்போது, அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்களா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் கூட சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.வீட்டை இடிக்க உத்தரவிடவில்லை என அப்போது கூறிய பெண் வட்டாட்சியர், மன்னிப்பு கோரினார். ஆனால், வட்டாட்சியர் தான் இடிக்க உத்தரவிட்டார் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திட்டவட்டமாக கூறினார்.இதையடுத்து இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்