ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது எதார்த்தமாக நடைபெற்ற நிகழ்வு என்றும், இதனை பெரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதுகாப்பிற்காகவே ஹெல்மெட் அணியப்படுவதாகவும், அது சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பொருந்தும் என தெரிவித்தனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு பொறுப்பேற்கும் விதமாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.