#kauveryhospital | #censer புற்றுநோய்க்கான ஹைபெக் சிகிச்சை - காவேரி மருத்துவமனை சாதனை வயிற்றுப் பகுதியில் பரவும் தீவிர புற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் நவீன ஹைபெக் சிகிச்சையை 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக வழங்கி சென்னை காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டிகளை அகற்றிய பின்னர், 41 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட கீமோதெரபி மருந்து வயிற்றுப் பகுதியில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதற்காகப் பிரத்யேக சிகிச்சை மையத்தையும் தொடங்கியுள்ள காவேரி மருத்துவமனை, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.