ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் நடுநிலையான அணுகுமுறையை கையாளவேண்டியுள்ளது என்றும் மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.