தமிழ்நாடு

சூரியனை ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் கால்வாய் கட்டுவது சாத்தியமில்லை எனக் கூறுவதா..? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பிய நிலையில், கால்வாய் கட்ட சாத்தியமில்லை என கூறுவதா என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் ராவணபுரம், செல்லப்பம் பாளையம் உள்பட 6 கிராம விவசாய நிலங்கள் பாலாறு, நல்லாறு ஆறுகள் மூலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டியதால், தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நல்லாற்றின் குறுக்கே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து, தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், கால்வாய் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என அரசு பதிலளித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார். மேலும், மூன்று மாதங்களில் காண்டூர் கால்வாய் குறுக்கே கால்வாயை கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டடார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி