#sir #kolkatahighcourt SIR பணிகளுக்காக மேற்குவங்கத்தில் அனைத்து நீதித்துறை அதிகாரிகள் விடுமுறை ரத்து மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில், மாநிலத்தின் அனைத்து நீதித்துறை அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், மாநிலத்தின் அனைத்து நீதித்துறை அதிகாரிகளின் விடுமுறைகளை பிப்ரவரி 21 முதல் மார்ச் 3 வரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், SIR பணிகளை விரைந்து முடிக்கவும், மாவட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட மேலாண்மை பொறுப்புகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என அறிவித்துள்ளனர். இதற்கிடையே, ஏற்கனவே விடுமுறையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்பவும், தவிர்க்க முடியாத மருத்துவ அவசர நிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.