தமிழ்நாடு

Highcourt | "ஊழல் செய்வதற்கு தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கலாம்" | ஹைகோர்ட் மதுரை கிளை காட்டம்

"ஊழல் செய்வதற்கு தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கலாம்"

thanthitv

Highcourt | "ஊழல் செய்வதற்கு தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கலாம்" | ஹைகோர்ட் மதுரை கிளை காட்டம் #highcourt #bribe #govtemployees #ThanthiTV சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான நலநிதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசு அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதியை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழல் செய்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கொந்தளித்த நீதிபதிகள், "மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் ஊழல் செய்வதற்குப் பதிலாகத் தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கலாம் என்றும், அரசுப் பணத்தில் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடுவது ஏன்?" என்றும் ஊழல் செய்த அரசு அதிகாரிகளை தாக்கிக் கேள்வி எழுப்பினர். மேலும், 99 சதவீத அதிகாரிகள் ஊழல் செய்பவர்களாகவே உள்ளனர் எனக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Delhi Jantar Mantar Protest | 163 தடை உத்தரவு அமல்.. 25000 போலீஸ் குவிப்பு? - உச்சகட்ட பரபரப்பு

TN By Election Results 2026 | வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற வேகத்தில் மரகதம் குமரவேல் அதிரடி பேட்டி

BREAKING || சென்னை வரும் PM மோடி... இறங்கும் 15000 போலீஸ் - ஹைஅலர்ட்டில் தலைநகர்

BREAKING || நேராக வீட்டிற்கே வரும் ராகுல் - விருந்து வைக்கும் CM விஜய்?

CM Vijay | "CM விஜய்க்கு இந்த வெற்றி முழு திருப்தியை கொடுக்காது" - பகீர் கிளப்பிய சுமந்த் சி